Description
ஆசிரியரைக் குறித்து….
இப்புத்தக ஆசிரியர் சகோ. எசேக்கியா பிரான்சிஸ் தனது பதினான்காம் வயதில் கர்த்தரை ஏற்றுக் கொண்டார். மாணவப் பருவம் முதல் தேவனுக்காக பலவிதங்களில் சேவை புரிந்தார். தற்பொழுது இளைய தலைமுறைத் தலைவர்களை எழுப்புவதும். அவர்களை ஊழியத்தில் ஊக்குவிப்பதுமே இவரது மிகப்பெரும் பாரமும் தரிசனமுமாம். பெராக்கா தீர்க்கதரிசன ஊழியங்கள்
எனும் ஒரு கூட்டு ஊழியத்தை நடத்தி, அதன் மூலம் பல்வேறு இடங்களில் ஜெய ஜீவியப் பயிற்சி முகாம்களையும் குறுகிய கால தீவிரப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி, தேவனுக் காக சேனையொன்றை தயார் செய்து வருகின்றார். இவர் மன் றாட்டுப் பணியைத் தனது தலையாய பணியாகக் கருதுகிறார். தேவன் தமது சபைக்குத் தந்த ஐவகை ஊழியங்களில் தீர்க்கதரிசனம்- ஊழிய அழைப்போடும். அபிஷேகத்தோடும் சபைகளுக்கு தேஸ் செய்தியை அளித்து வருகிறார். தனது இதயத்தில் தேவன் தரும பாரங்களை புத்தக வடிவிலும் எழுதுகின்றார். பெராக்கா செய்தி மடல் எனும் இதழையும் எழுதி வெளியிடுகிறார்.
இவர் எழுதிய ஜெபமேஜீவன், மன்றாட்டின் மாண்புபோன்ற புத்தகங்கள் பல இடங்களில் ஜெபப் புரட்சியை ஏற்படுத்தியிருக். கிறது. மற்றும் இயேசுவைப் போல், டுனாமிஸ் வல்லமை) ஆராதனை போன்ற புத்தகங்கள் சபைகள் நடுவில் எழுப்புதவை ஏற்படுத்தி வருகிறது.
தேவன் இவரை இந்தியாவின் பல பகுதிகளிலும் அபிநக வெளிநாடுகளிலும் வல்லமையாய்ப் பயன்படுத்தி வருகிறார். கடைசிக் கால சத்தியங்களை வெளிப்படுத்தி வருகிறார்
Reviews
There are no reviews yet.