Description
“ஜெபத்தைப் பற்றிய ஒரு காவியம்” தேவனுடைய மகிமையை அநுபவியுங்கள்
ஜெபத்தைக் குறித்த அரிதான காரியங்களை சகோதரர் செல்வராஜ் அவர்கள் திறம்பட தன்னுடைய நான்காவது புத்தகமாகிய இதில் விளக்கியுள்ளார். 1991ல் தரிசனதில் தான் கண்டவைகளை இந்தத் தொகுப்பில் அழகுற விளக்கி ஜெபத்தைக் குறித்த விலைமதிப்பற்ற வெளிப்பாடுகளை வெளியரங்கமாக்கியுள்ளார். யாத்திராகமம் 25-22 ஐ பயன்படுத்தி, ஆசரிப்புக் கூடாரம் ஜெபத்திற்கு நிழலாட்டமாய் இருக்கிறக் காரியங்களை. புதிய அணுகுமுறையோடு, விரிவாக, சீரிய அளவில் விளக்கியுள்ளார்.
ஆசரிப்புக் கூடாரம்
1.வெண்கல பலிபீடம்
2.கழவும் தொட்டி
3. விளக்குத் தண்டு
4. சமுகத்தப்பம்
5. தூப பீடம்
6.உடன்படிக்கைப் பெட்டி
7. கிருபாசனம்
தமது வழக்கமான எளிய நடையில் கிரமமாகவும். சுவாரசியமாகவும், இதன் ஆசிரியர் வேதத்தில் இருந்து ஜெபத்தைப் பற்றிய விதிகளை நடைமுறை அனுபவரீதியில் பகுத்தறிவிக்கிறார். இந்த புத்தகத்தின் பக்கங்கள் ஜெபத்தைப் பற்றிய புதிய பரிமானத்துடன் மிளிர்கின்றன. ஆவியில் நிரம்பின ஒவ்வொரு விசுவாசியும், பரிந்து மன்றாடுபவரும் இதை வாசிக்க வேண்டும் என சிறப்பாக வலியுறுத்துகிறேன்.
– போதகர். ஜெதிதியா தாம் சிங்கப்பூர்
ஆசிரியரைப்பற்றி
இயேசு ஊழியங்களின் (Jesus Ministries) ஸ்தாபகர் ஆன சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் திபெத்தியர்கள் மற்றும் நேப்பாளிகள் மத்தியில் சுவிசேஷத்தை அறிவித்து வருகிறார். இவரது வாழ்க்கையில் விளங்கும் தேவனின் அபிஷேகமானது அற்புதங்கள் அடையாளங்கள் மற்றும் அதிசயங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது . சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் 1979ம் வருடம் முதல் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, தேவனுடைய குணமாக்கும் வல்லமையை தமது தலைமுறைக்கு கொண்டு வருகிறார். இவரது ஊழிய பயணங்கள், ஐந்து கண்டங்களில் உள்ள 35க்கும் மேலான நாடுகளுக்கு இவரை எடுத்துச் சென்றுள்ளது.
Reviews
There are no reviews yet.